சனி, 6 டிசம்பர், 2008

கிண்டர் கார்டன் கிங்கரர்கள்

ஒற்றை வரி தலைப்பிற்கு ஓராயிரம் விளக்கம் சொல்லலாம் . நான் ஒன்றே ஒன்று சொல்லபோகிறேன் .என் தேசத்தில் கல்விக்கு நேர்ந்துள்ள கேடு பற்றித்தான் பேசுகிறேன்.ஒவ்வொரு இந்தியனும் தன்னுடைய வாரிசிற்கு சிறப்பான எதிர்காலம் தர கல்விக்கு முக்கியத்துவம் தருகிறான் . ஆனால் வற்றாத ஜீவ நதிகள் இருந்தும் சுத்தமான மினரல் வாட்டருக்கு அலைவது போல் நல்ல கல்விக்கும் அலைய வேண்டிஉள்ளது .
அரசியல்வாதிகள் புண்ணியத்தில் கல்வி இன்று பணம கொளுத்த , குறைபர்வை உடைய கல்வி தந்தைகள் கையில் போய் சேர்ந்து விட்டது. அரசாங்க பள்ளிகள் குறை பிரசவ குழந்தைகள் போல் உள்ள நிலையில் பகட்டான தனியார் பள்ளிகளை நாட வேண்டிய கட்டாயம். அங்கு எல் கே ஜி வகுப்பில் சேர்க்க அவர்கள் நடத்தும் கூத்து இருக்கிறதே. ஆகா. பள்ளிவாசற்கதவு முன் சொர்கவாசல் திறக்க காத்திருக்கும் கூட்டம் போல் அர்த்த ஜாமத்தில் கூட்டம்.அதுவும் ஒரு விண்ணப்பம் ருபாய் ஐந்நூறு வரை ஒருநாள் கிரிகெட் டிக்கெட் போல் விற்று தீர்கிறது. அடுத்து இன்டெர்வியு படலம் . அப்பா அம்மா இருவரும் பட்டதாரிகள் . வீட்டில் கம்ப்யூட்டர் . போன்ற நிபந்தனைகள் . ஒரு நண்பரின் குழந்தை எல்லா தகுதி இருந்தும் தேர்வு செய்யப்படவில்லை . காரணம் அந்த குழந்தை "குழந்தை த்தனமாக" இருந்ததாம். உங்கள் குழந்தை இன்டெர் வியுவில்
சரியாக பதில் அளிக்கவில்லை என்ற காரணம் வேறு.
மூன்று வயது குழந்தைக்கு ஸ்கூல் அட்மிஷன் என்றால் தெரியுமா ? இன்டெர் வியு என்றால் தெரியுமா? பெற்றோர் அலைகிறார்கள் பணத்தை வைத்துக்கொண்டு. நீங்கள் கேட்கலாம் . அரசு பள்ளியில் சேர்க்கலாமே என்று. பல அரசு பள்ளிகளில் ஒழுங்கான கட்டிடங்கள் இல்லை.முறையான கல்வி திட்டம் இல்லை. ஓர் அரசு பள்ளியில் வகுப்பறையில் அனைத்து ஆசிரியர்களும் சேர்ந்து மது விருந்து கொண்டாடிய கதை ; ஆங்கில ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி போன்ற செய்திகள் வந்தது. சாதிகொடுமைகள் வேறு . வீரமும் செல்வமும் கல்வியை ஆட்டுவிக்கின்றன.கிண்டர் கார்டன் கிங்கரகளின் தொல்லை தாங்காமல் உச்ச நீதிமன்ற படி ஏறியவர்கள் உரிய தீர்ப்பை பெற்றும் நிலைமை மாறவில்லை. ஆக ஒரு பக்கம் தரமற்ற கல்வி மறு பக்கம் "பண பரிமாற்ற" கல்வி. எங்கே போவார்கள் ஏழை குழந்தைகள் ?

2 கருத்துகள்:

Maximum India சொன்னது…

முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள். மேலும் பதிவுலகத்தில் பல முத்திரைகள் படைக்க வாழ்த்துக்கள்

கல்வியுலகம் முக்கியமாக தமிழகத்தில் இன்றைக்கு தாதாக்களின் பிடியில் உள்ளது. கல்விப் பணியை இறைபணியாக கருதிய காலம் போய், இன்றைக்கும் பணம் பண்ணும் தொழிலாக மாறி விட்டது நமது பண்பாட்டின் பின்னடைவே என்று கூறலாம்.

நன்றி

பொதுஜனம் சொன்னது…

thank u max.