சனி, 6 டிசம்பர், 2008

தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்

இந்தியாவில் சென்ற வாரம் நடத்தப்பட்ட கோர தாக்குதல்களுக்கு இவர்கள் தான் பொறுப்பு என்று அனைத்து விரல்களும் பாகிஸ்தானின் லஷ்கர் இ தோய்பா , ஐ எஸ் ஐ போன்றவற்றை நோக்கி குற்றம்சாட்டுகின்றன..இந்தஅமைப்புகளின் பின்னணி என்ன. பார்ப்போம் வாருங்கள்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினை முடிந்த கையொடு அயல்நாடுகள் தொடர்பான உளவு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு ஒரு பிரிட்டிஷ் அதிகாரியால் ஏற்படுத்தப்பட்டதே ஐ எஸ் ஐ .பின்னர் அயுப் கான் போன்ற பாக் தலைவர்கள் அரசியல் ஆதாயத்துக்காக ஐ எஸ் ஐ - ஐ பயன்படுத்த தொடங்கியதும் கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தான் கடிவாளத்தை பிடிக்கக் கற்றுகொண்டது ஐ எஸ் ஐ. புட்டோ காலத்தில் அதன் ஆட்டம் கட்டில் இருந்தது என்றாலும் பின் ஜியா உள் ஹக் காலத்தில் ஆட்சியை ஆக்கிரமிக்க தொடங்கியது.சோவியத்- ஆப்கன் போரின்போது அமெரிக்கா தேனும் பாலும் ஊற்றி ஐ எஸ் ஐ- ஐ வளர்த்தது. பின் எண்பதுகளின் இறுதியில் காஷ்மீர் பிரச்னையில் மூக்கை நுழைத்து இன்று வரை தலைவலி கொடுத்து வருகிறது.
இன்று ஐ எஸ் ஐ பாகிஸ்தானின் அரசியலில் ஒரு அசைக்க முடியாத சக்தி. எந்த தலைமையும் இதன் பிடிக்குள் கட்டுபட்டே உள்ளனர். மீறி யாராவது ஜனநாயகம் பற்றி பேசினால் பெனசிருக்கு நேர்ந்த கதி தான். இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பே ஐ பி என்ற அமைப்பு உருவாக்கப்பட்ட போதும் அறுபதுகளின் இறுதியில் இந்திரா காந்தி முயற்சியால் அமெரிக்காவின் சி ஐ எ பாணியில் ரா உருவாக்கப்பட்டது. பங்களாதேஷ் என்ற தேசம் உருவாக ரா முக்கிய பங்காற்றியது. . பொதுவாக எல்லா உளவு அமைப்புகளும் செய்வது போல் மற்ற நாடுகளில் ரா , ஐ எஸ் ஐ தங்கள் பணிகளை மேற்கொள்கின்றன.தூதரகம்,பன்னாட்டு கம்பெனிகள் , அரசு சாரா அமைப்புகள் போன்றவற்றில் இவை ஊடுருவயுள்ளன. ஆனால் இந்தியா வில் பயங்கரவாத செயல்களை ஊக்குவிப்பது ஒன்றே தலையாய பணியாக ஐ எஸ் ஐ செய்கிறது.லஷ்கர் போன்ற அமைப்புகளுக்கு பணம் பொருள் இடம், பயிற்சி கொடுத்து பயங்கரவாத செயல்களை செய்ய தூண்டுகிறது.
தற்போது பாகிஸ்தானில் உள்ள சிவிலியன் அரசால் ஐ எஸ் ஐ - ஐ கட்டுப்படுத்த இயலாது.ஆக தீவிர வாதத்தின் ஊற்றுக்கண் அங்கே இருக்கும்வரை இங்கே மும்பையில் நடந்தது போன்ற செயல்கள் தொடரும் என்றே தோன்றுகிறது.இந்தியா தற்போது செய்யவேண்டியது தன்னுடைய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியதே. நாட்டின் பாதுகாப்பின் பொறுப்பை துணிச்சலான நேர்மையான (மானேக் ஷா போன்ற )அதிகாரியிடம் கொடுக்கலாம். நல்ல நேர்மையான மனிதர்களை ஜனாதிபதி பதவியில் உட்கார வைத்து அழகு பார்ப்பதை விட அவர்களிடம் அதிகாரமுள்ள பொறுப்பை கொடுக்கலாம். ஆனால் மும்பை தாக்குதல் ஆரம்பித்த ஒரே நாளில் அடுத்த கட்சியை குற்றம் சாட்டும் பணியை ஆரம்பித்த நம் அரசியல்வாதிகளிடம் இதை எதிர்பார்க்க முடியுமா?

5 கருத்துகள்:

Maximum India சொன்னது…

அருமையான பதிவு

ஐ எஸ் ஐ இன் குணாதிசியங்களைப் பற்றி சிறப்பாக ஆராய்ச்சி செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

இந்தியாவின் பாதுகாப்பு மைய அரசின் முக்கிய கடமை. இதில் சாக்கு போக்கு சொல்லாமல் உடனடியாக இந்திய உள்நாட்டு பாதுகாப்பிற்கு பொறுப்பு வகிக்கும் ஒரு காவல் படை அமைப்பை உருவாக்க வேண்டும். அது மாநிலங்களின் பொறுப்பில் உள்ள சட்டம் ஒழுங்கு தவிர மற்ற அத்தியாவசிய பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப் பட வேண்டும்.

பொதுஜனம் சொன்னது…

thank u max.i need ur patronage.

Maximum India சொன்னது…

//i need ur patronage.//

Why not? it is my pleasure.

கபீஷ் சொன்னது…

ஐ எஸ் ஐ பற்றி பல தெரியாத தகவல்கள் தந்தமைக்கு நன்றி. மேக்ஸிமம் இந்தியா சொன்னதை வழி மொழிகிறேன்

பொதுஜனம் சொன்னது…

நன்றி கபீஷ்.