சனி, 17 ஜனவரி, 2009

எரியும் இலங்கை



இலங்கை போர் இறுதி கட்டத்தை எட்டி விட்ட தாக இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். இராணுவம் இலக்கை நெருங்கி விட்டதாகவும் பிரபாகரனை சுற்றி வளைத்து விட்டதாகவும் செய்திகள் வருகின்றன. கிளிநொச்சியில் தொடங்கி புலிகளின் கட்டுபாட்டில் உள்ள நகரங்கள் வீழ்ந்து கொண்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன.. இங்கே தமிழ் நாட்டில் சிலர் உண்ணா விரதம் தொடங்கி விட்டனர்.. ஒரு வழியாக வெளிஉறவு செயலர் அந்தஸ்தில் ஒரு அதிகாரி இலங்கை சென்றுள்ளார். ஆனால் இலங்கை பிரச்னையில் இந்திய பல காலகட்டங்களில் எடுத்துள்ள நிலைப்பாடும் பிரந்திய வல்லரசு என்ற நிலையை அடைய அது என்ன செய்திருக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.




ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இலங்கை பிரச்னை 1983 க்கு பின் கனலாக எரியத்தொடங்கியது. அப்போது இருந்த தமிழ் அரசியல் கட்சிகள் உண்மையாகவே தமிழர்களுக்கு குரல் கொடுத்தன. போர் பயிற்சிகள், தளவாடங்கள், பொருளுதவி போன்றவை தாரளமாக அளிக்கப்பட்டது. பிரபாகரன் ஹீரோ வாக போற்றப்பட்டார். இந்திய அமைதிப்படையை அனுப்ப ராஜீவ் முடிவு செய்தது இந்த நிலையை முற்றிலுமாக மாற்ற அடித்தளம் போட்டது என்றே கூறலாம். அதுவரை இந்தியா மீது இருந்த நிலைப்பாட்டையும் புலிகள் மாற்றிக்கொள்ளும் நேரம் வந்தது. இலங்கையில் அமைதிப்படையின் செயல் பாடுகள் பல கண்டனகளை எழுப்பியது.


ராஜீவ் கொல்லப்பட்டது ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்கி அது வரை இலங்கை பிரச்னை மேல் இருந்த நிலைபாட்டை தலைகீழாக மாற்றியது. 1990 க்கு பின் தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தனக்கு வசதியாக இப்ப்ரச்னையில் கொள்கை களை வகுத்துக்கொன்டன. ஆதரவு குரல் கொடுத்தவர்கள் தேச துரோகிகள் என்ற முத்தரை குத்தப்பட்டனர். பொடா சட்டம் வசதிற்கேற்ப பயன் படுத்தப்பட்டது. இன்றைய சூழலில் திரை உலகினர் ஒரு சாரார் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். அந்த நோக்கம் கூட சந்தேக கண்ணோடு பார்க்கபடுகிறது




அரசியல் கட்சிகள் சட்ட மன்ற தீர்மானம் போட்டும் பிரணாப் முகர்ஜீ இன்னும் இலங்கை செல்லவில்லை. இலங்கை . இலங்கை பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டார் போல் இருக்கிறது. ஆக இந்திய அரசின் நிலை " அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் என் அவசரப்பட்டு மூக்கை நுழைக்க வேண்டும் " என்று உள்ளதோ என்று என்ன தோன்றுகிறது. ஏன் என்றால் இலங்கைக்கு தார்மீக ரீதியாக உலக நாடுகளின் துணையோடு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த இந்தியாவால் முடியும். உலக அளவில் இந்த பிரச்னையை கொண்டு சென்று சிறிய நாடான இலங்கையை கட்டு படுத்த இயலும் . ஆனால் ஏன் செய்ய மறுக்கிறது ? .இலங்கை பிரச்னையில் ஒரு தெளிவான உறுதியான முடிவு எடுக்காததே காரணம். இலங்கையில் இனபடுகொலை செய்யப்படுவது தமிழர்கள் என்பதை உணர்ந்தும் உறுதியான நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.




தமிழர்கள் கொல்லபடுவதை கண்டித்து வெறும் கண்டன அறிக்கைகள் கொடுத்து விட்டு திருமங்கலம் இடை தேர்தலில் மூழ்கி விட்டன நம் கட்சிகள். வரும் பாராளு மன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட தொடங்கி விட்டனர். கண்டன அறிக்கைகளும் கவிதைகளும் உண்ணா விரதங்களும் பதவி ராஜினாமாக்களும் சாகும் தமிழனை காப்பாற்றாது. அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தால் தமிழகம் உணர்வு பொங்க எழும். மத்திய அரசை விழித்தெழ செய்யும்.போரை நிறுத்தி மீதும் பேச்சு வார்த்தையை துவக்க கை கொடுக்கும். ஆனால் இலங்கை பிரச்னையை தேர்தலுக்கு பயன் படுத்திக்கொள்ளும் எண்ணம் இருந்தால் ...பாவம் இலங்கை தமிழர்களுக்கு அனுதாப கூட்டம் போடுவதை தவிர வேறு வழி இல்லை.

7 கருத்துகள்:

Maximum India சொன்னது…

இலங்கையில் எழும் தீ நம் மனசாட்சியைச் சுடுகிறது. சகோதர இனம் படு கொலை செய்யப் பட்டு வருவதை உணர்ந்தும் அவர்களுக்கு உதவ முடியாத நிலையில் இருப்பது பெருத்த அவமானத்தை தருகிறது. உலகிலேயே கண் முன்னர் அநியாயங்கள் நடைபெற்றும் கூட தமது சகோதர இனங்களுக்கு உதவ முடியாத இனங்கள் (அதுவும் மிகப் பழம் பெருமை வாய்ந்தவை) இரண்டு மட்டுமே உண்டு. ஒன்று ஒரு சிறிய இஸ்ரேலை சுற்றி உள்ள பெரிய அரபு நாடுகளின் வாழும் அரபு மக்கள் இனம். மற்றொன்று, பிராந்திய வல்லரசு என்று சொல்லிக் கொள்ளும் இந்தியாவின் தேசிய அரசை சென்னையில் இருந்து உருவாக்கியதாக பெருமை கொள்ளும் தமிழர் இனம். இந்த இயலாமைப் போக்கின் அடிப்படையில் வருங்கால சந்ததியினர் நம்மை தூற்றப் போகின்றனர் என்பதில் ஐயமில்லை.

மேலும் உலகிலேயே தன் நாட்டினரை தாமே கொலை செய்யும் நாடு இலங்கை மட்டுமே என்று ஒரு மூத்த சிங்கள பத்திரிக்கையாளர் கூறியதும், தான் கொலை செய்யப் படப் போவதை முன்னரே உணர்ந்து அந்த கொலைக்கு ஸ்ரீலங்கா அதிபர் காரணம் என்றும் மரண வாக்கு மூலம் அளித்ததும் குறிப்பிடத் தக்கது. உலகெங்கும் அமைதியை உருவாக்க முனைந்த நேருஜி பிறந்த நாடு தன் கண் முன்னே நடக்கும் அநியாயங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது நீண்ட கால நோக்கில் எதிர்வினைகளையே உருவாக்கும்.

பொதுஜனம் சொன்னது…

நன்றி மேக்ஸ் . போஸ்னியா வில் கூட இது போன்ற பிரச்சனை இருந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் மிலோசொவிக் அட்டகாசம் பொறுக்க முடியாமல் உலக நாடுகள் அமெரிக்கா தலைமையில் எதிர்ப்பை காட்டவும் நல்ல நிலைமை வந்தது. ஆனால் இலங்கை பிரச்னையில் அரசியல் வாதிகள் கூறும் தொப்புள் கொடி உறவு இருந்தும் நாம் ஒன்றும் செய்ய வில்லை என்பது மன்னிக்க முடியாத தவறு. யோசித்து பாருங்கள். இங்கே இருக்கும் ஒவ்வொரு தமிழ் குடும்பத்தில் ஒரு நபர் அடக்கு முறை காரணமாக கொல்லப்பட்டால் எத்தனை தீவிரவாதிகள் உருவாவார்கள் ?

Maximum India சொன்னது…

உண்மைதான். தீவிரவாதத்தை அழிக்கிறோம் என்ற பெயரில் பல நாடுகள் பல புதிய போராளிகள் உருவாக காரணமாகி விடுகின்றன.

அப்புறம் நீங்கள் ஏன் பொதுஜனம் என்ற பெயரிலேயே பதிவுகள் வெளியிடக் கூடாது.

pothujanam சொன்னது…

உங்கள் கோரிக்கை கனிவுடன் பரிசீலிக்கப்பட்டது. பார்க்கவும் . podhujjanam.blogspot.com
நன்றி.

கபீஷ் சொன்னது…

நல்ல அலசல் + ஆதங்கம்.

கபீஷ் சொன்னது…

நல்ல அலசல் + ஆதங்கம்.

பொதுஜனம் சொன்னது…

நன்றி கபீஷ்.