திங்கள், 9 பிப்ரவரி, 2009

விருது வாங்கிட்டீங்களா ?



விருதுகள் கொடுக்க பட வேண்டும் .. வாங்கப்பட கூடாது.


விருதுகள் என்பவை தனிமனிதன் சமூகத்திற்கு ஆற்றிய பணி அல்லது அவரது செயலால் சமுதாயத்திற்கு விளைந்த நன்மை , தனி மனித சாதனை போன்ற வற்றிற்கு வழங்கப்படுகின்றன ..(என்று நம் நினைதுக்கொண்டுள்ளோம்.) ஆனால் தற்போது அந்த நோக்கங்கள் சிதைக்கப்பட்டு விட்டனவோ என்று தோன்றுகிறது.


நோபல் ஆஸ்கர் முதல் நம்ம ஊர் பத்மா விருதுகள் வரை சர்ச்சை இல்லாத விருதுகள் இல்லை.மிக உயரிய விருதான நோபல் கூட சிலரது வழிகாட்டுதல் பேரில் வழங்கப்பட்டன என்று செய்திகள் வருகின்றன. ஆஸ்கர் பற்றி சொல்ல வேண்டாம். திரைப்படங்கள் வியாபார நோக்கில் தயார் செய்யபடுவதால் அவைகளின் மேல் பன்னாட்டு கம்பனிகள் ஆதிக்கம் மிக அதிகம். ஏன் ? ஐஸ்வர்யா, சுஸ்மிதா என்று தொடர்ந்து இந்தியர்கள் பெற்ற விருதுகள் கூட பன்னாட்டு கம்பனிகள் இந்தியாவில் கால் பதிக்க வசதியாக உருவாக்கப்பட்டதுதான் என்று கூட ஒரு கருத்து உண்டு..தற்போது slum dog millionaire ம் அந்த குற்றச்சாட்டில் உள்ளது.


அட சினிமா கிடக்கட்டும். நம்ம பத்மா விருதுகளில் எழுந்த சர்ச்சை ஒரே தமாஷ் போங்க. காஷ்மீரில் இல்லாத ஒரு ஆளுக்கு விருது கொடுத்து இருக்கிறார்கள். (பார்த்து அவர் எதாவது தீவிர வாதியாக இருக்க போகிறார் ).இளைய ராஜா விற்கு இன்னமும் பத்மா விருது தரப்பட வில்லை. சினிமாவில் நேற்று முளைத்த காளான் களுக்கு எல்லாம் ஏதாவது ஒரு விருது கொடுத்து விடுகிறார்கள்.ஓரளவிற்கு சரியாக கொடுப்பது ராணுவத்திற்கு வழங்கப்படும் சக்ர விருதுகள். அதிலும் fake encounter என்று புகார். எல்லாமே சிபாரிசு, பணம், ஆள் பலம் என்று ஆனா பிறகு விருதுகளும் அதில் தப்ப வில்லை.


ஊடகங்களும் என்ன சளைத்தவர்களா ?இந்தியன் ஆப் த இயர், தமிழன் ஆப் லாஸ்ட் இயர் என்று கொடுக்க ஆரம்பித்து விட்டன. இப்படியே போனால் ஒரு கட்டத்தில் யாருக்கு விருது கொடுக்கப்பட வில்லை என தேட வேண்டி இருக்கும்.
எல்லா வசதிகளும் நிறைந்த ஒரு மனிதர் சாதனை செய்தால் அதில் வியக்க வேண்டியது ஒன்றும் இல்லை. அதற்காக அபினவ் சாதனையை குறைத்து சொல்ல வில்லை. அர்விந்த் கேஜ்ரிவல் போன்ற முகம் தெரியாத , சமூகத்தின் பின் புலத்தில் இருந்து வருகிற மனிதர்களின் சிறிய சாதனைகள் மதிக்கப்பட வேண்டும்ஒரு சினிமா நடிகர் செய்த சாதனையை விட சமூகத்தின் அடித்தட்டுகளில் சில மனிதர்கள் செய்யும் சாதனை மகத்தானது. பச்சோரி பெற்ற நோபல் விருதுக்கு பிறகுதான் சுற்று சூழல் பற்றி சிலர் பேசுகிறார்கள்.. பாபா ஆம்தே சாதனை அவரது அந்திம காலத்தில் தான் மதிக்கப்பட்டது.இன்னும் முகம் தெரியாத மனிதர்கள் எத்தனயோ பேர். டோனிகள், சச்சின்கள் , அபினவ் சாதனை அங்கீகரிக்கபடவேண்டியதுதான் . ஆனால் அவர்களுடன் ஒரே மேடையில் நிற்க அந்த " முகம் தெரியாத இந்தியர்களுக்கும் " தகுதி உள்ளது ..


எனவே "விருதுகள் கொடுக்க பட வேண்டும் .. " வாங்கப்பட " கூடாது. "


4 கருத்துகள்:

Maximum India சொன்னது…

அருமையான உணர்வு பூர்வமான பதிவு.

தனியார் விருதுகள் பெரும்பாலும் வியாபார நோக்கிலும் அரசு விருதுகள் அரசியல் (ஊழல்) நோக்கிலுமே அமைந்திருப்பதனால், அவற்றை நம்மைப் போன்ற பொதுமக்கள் அதிகம் பொருட்படுத்த வேண்டாம்.

slumdog millionare மட்டுமல்ல, இந்தியாவைத் தரக் குறைவாக (அதிலும் ஓரளவுக்கு உண்மை உள்ளது என்பதை மறுக்க முடியாது) காட்டும் எந்த ஒரு படைப்புக்குமே உலக அளவில் வரவேற்பு அதிகம். அதைப் பார்த்து நாமும் பெருமை பட்டுக் கொள்வதுதான் வேதனை கலந்த வேடிக்கை.

இப்போது நாமே ஒரு மீடியா என்பதால் (நாமே ரைட்டர், நாமே எடிட்டர் நாமே பப்ளிஷேர் என்பதால்) நம்மால் முடிந்த வரை நல்ல மனிதர்களை உலகிற்கு அறிமுகப் படுத்தலாம் (உங்கள் பெரியப்பாவையும் சேர்த்து)

அப்புறம் ஜாலியா சில விஷயங்கள்.

திடீரென்னு "பத்மா"ன்னு படிச்சதுல எனக்குக் தெரியாம யாருடா அது பத்மான்னு ஒரு நிமிஷம் குழம்பிப் போயிட்டேன்.

அப்புறம் நமக்கும் ப்ளாக்கர் ஆப் த இயர், ஆப் த மந்த் , ஆப் த வீக் அப்படின்னு ஏதாவது கிடைக்குமா பாருங்க.

பொதுஜனம் சொன்னது…

நன்றி.
நாமும் விருது கொடுப்போம்.
உங்கள் பதிவின் சிறந்த " பின்னூட்ட பிசாசு " யார் ?
சமூக அக்கறை கொண்ட " சமூக சாம்ராட் " யார்?

கபீஷ் சொன்னது…

Very good post!! Second the post

பொதுஜனம் சொன்னது…

thank u kabeesh.